ஜெயம் ரவிக்காக மல்லுக்கட்டும் த்ரிஷா, அஞ்சலி

|

சென்னை: அப்பாடக்கர் படத்தில் அஞ்சலியும், த்ரிஷாவும் ஜெயம் ரவிக்காக சண்டையிடும் வகையில் ஒரு பாடலை தாய்லாந்தில் படமாக்கி வருகிறார்கள்.

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, விவேக் உள்ளிட்டோர் நடித்து வரும் ஆக்ஷன் கலந்த காமெடி படம் அப்பாட்டக்கர். தமண் இசையமைத்துள்ள இந்த படத்தில் வரும் காட்சிகளை எல்லாம் படமாக்கிவிட்டனர். சண்டைக்காரி என்ற ஒரேயொரு பாடல் காட்சியை மட்டும் தான் படமாக்க வேண்டி உள்ளது.

Trisha, Anjali fight for Jayam Ravi

இந்நிலையில் படக்குழுவினர் அந்த பாடல் காட்சிக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். சண்டைக்காரி பாடலை த்ரிஷா மற்றும் அஞ்சலி ஜெயம் ரவிக்காக சண்டை போடுவது போன்று படமாக்கி வருகிறார்கள்.

இந்த பாடல் காட்சியை படமாக்கியதும் படப்பிடிப்பு முடிந்துவிடும். அதன் பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். சித்தி பிரச்சனைக்கு பிறகு திரும்பி வந்துள்ள அஞ்சலிக்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

படத்தில் பூர்ணா கௌரவ தோற்றத்தில் வந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment