திருவனந்தபுரம்: மலையாள இளம் நடிகர் துல்கரின் நடிப்பில் உருவாக்கி வரும் சார்லி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
துல்கர்- பார்வதி மேனன் நடிப்பில் உருவாகி வரும் சார்லி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ள நிலையில் வெளியாகியுள்ள படத்தின் போஸ்டர் படத்தில் துல்கர் ஏற்றிருக்கும் கேரக்டரை அறிமுகப்படுத்துகிறது.
ஓ காதல் கண்மணியில் அழகான பையனாக வந்த துல்கர், இந்தப் படத்தில் தாடி மற்றும் மீசையுடன் கூடிய ஒரு முரட்டுத் தோற்றத்துடன் கூடிய ஒரு இளைஞனாக நடிக்கிறார். பெங்களூர் டேஸ் படத்தில் இணைந்து நடித்திருந்த துல்கர் - பார்வதி மேனன் ஜோடி இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் மீண்டும் இணைகின்றனர்.
படத்தின் இயக்குநர் மார்ட்டின் பரக்கத், பேச்சுலர் பார்ட்டி மற்றும் 5 சுந்தரிகள் போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆர்.உன்னி இப்படத்திற்கு கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார்.
துல்கர் மற்றும் பார்வதி இவர்களுடன் நெடுமுடி வேணு, சீதா, செம்பன் வினோத் போன்றோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பானது கொச்சி, மூணாறில் தொடங்கி குஜராத்திலும் எடுக்கப் படவிருக்கிறது.
Post a Comment