டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டிஎன்எஸ் செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் அபூர்வ மகான்.
இந்த படத்தில் தலைவாசல் விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர்மனோகர், வடிவுக்கரசி, மீராகிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் என ஒரு பட்டாளமே படத்தில் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தி நடிக்கிறார்.
சுரேஷ்அர்ஷ் எடிட்டிங் செய்ய, வி தஷி இசையமைக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ஆர்.மணிமுத்து. படம் பற்றி இயக்குநர் கே.ஆர்.மணிமுத்துவிடம் பேசினோம்.
"இந்தப் படத்திற்காக ஆறடி உயரமுள்ள பாபா சிலை வடிவமைக்கப் பட்டு படப்பிடிப்பிற்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது நிறைய தடங்கல்கள் ஏற்பட்டன. அந்த தடங்கல்கள் அனைத்தும் பாபா அருளால் நீங்கின.
படப்பிடிப்பிற்கு உருவாக்கப் பட்ட அந்த ஆறடி உயர பாபா சிலையை ஆவுடையார் கோயில் என்ற ஊரில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பாபா அருள் விரைவில் கிடைக்கும்," என்றார்.
Post a Comment