சூர்யா முன்னிலையில் இன்று பிரமாண்டமாக வெளியாகிறது பாகுபலி தமிழ் டிரைலர்!

|

சென்னை: சர்வதேச அளவில் பாராட்டுகளைக் குவித்து வரும் பாகுபலி படத்தின் தமிழ் டிரைலர் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்து கொள்கிறார்.

பாகுபலி தெலுங்கு டிரைலர் மூன்று தினங்களுக்கு முன் வெளியானது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொள்வார் முதலில் கூறப்பட்டது. ஆனால் எந்த சிறப்பு விருந்தினரும் இல்லாமலேயே படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது.

Surya to grace Bahubali Tamil Trailer launch today

இதுவரை இந்த டிரைலரை சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். செலுங்குப் பட உலகைப் பொருத்தவரை இது புதிய சாதனை. தமிழில் ஏற்கெனவே ஐ, கோச்சடையான், லிங்கா ட்ரைலர்கள் இந்த எண்ணிக்கையைக் கடந்து பார்க்கப்பட்டவை.

பாகுபலி டிரைலரை பார்த்து ரசித்த நடிகர் சூர்யா மற்றும் ஆர்யா, இந்தி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரன் ஜோஹர் ஆகியோர், வெகுவாகப் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர்.

இன்று பாகுபலியின் தமிழ் டிரைலர் வெளியீடு மாலை 6.30 மணியளவில் சென்னை ஹயாத் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனுஷ்கா, நாசர், சத்யராஜ், தமன்னா மற்றும் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சூர்யா முன்னிலையில் ட்ரைலர் வெளியிடப்படுகிறது.

தெலுங்கு டிரைலரின் வெற்றியால் தமிழ் டிரைலரையும் பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்து இந்த விழாவை இன்று நடத்துகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தமிழில் பாகுபலி படத்தை சூர்யாவின் சகோதரர் கே.ஈ.ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment