சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் அஜித் என்ன செய்தாலும் அது செய்தியாகிவிடுகிறது. சில வருடங்களாக எந்த பத்திரிகைகளுக்கும் பேட்டி அளிப்பதில்லை, சினிமா சம்பந்தமான எந்தவித விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அவ்வளவு ஏன் தான் நடிக்கின்ற படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை.
எனது வேலை நடிப்பது மட்டுமே அதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். ஆனாலும் நாள்தோறும் அஜித்தைப் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வரத் தவறுவதில்லை. அஜித் பிரியாணி செய்து தந்தார், அஜித் இயல்பாக இருக்கிறார், இயல்பாக நடிக்கிறார் நடக்கிறார் போன்ற செய்திகளில் புதிதாக அஜித் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்கிறார் என்ற தகவல் இணைந்துள்ளது.
ஆமாம் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது குடும்பத்தினருடன் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடும் அஜித் தற்போது அதிகாலையில் போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகளில் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவுடன் தனது வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதிகளில் நடைபயிற்சி செய்கிறாராம்.
படப்பிடிப்பு முடிந்ததும் நேராக மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடும் அஜித் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க ஒருபோதும் தயங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment