இனிமே இப்படித்தான் இன்று ரிலீஸ்.. சந்தானத்துக்கு குவியும் வாழ்த்து!

|

சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படம் இன்று உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியானது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களுக்குப் பிறகு சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் இனிமே இப்படித்தான்.

Santhanam's Inimey Ippadithaan released today

இந்தப் படம் இன்று உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 235-க்கும் அதிகமான அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட்ஜெயன்ட் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

சந்தானத்தைப் பொறுத்தவரை, அவர் நாயகனாக நடித்த படங்களில் அதிக அரங்குகளில் வெளியாகும் படம் இதுதான்.

எனவே சக நடிகர்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் உதயநிதி, ஆர்யா, விவேக், இயக்குநர் ராஜேஷ் எம், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சந்தானத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் உதயநிதி, "ஆல் தி பெஸ்ட் முதலாளி" என சந்தானத்தை வாழ்த்த, பதிலுக்கு "நன்றி முதலாளி" என கூறியுள்ளார் சந்தானம்.

அதேபோல ஆர்யாவின் வாழ்த்துக்கு 'நண்பேன்டா' என பதிலளித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சந்தானம், "உங்கள் வாழ்த்து விசேஷமானது சார்.. மிகப் பெரியது" என்று கூறியுள்ளார்.

 

Post a Comment