விளையாட்டாக நான்கு ஆண்டுகள் படங்களே இல்லாமல் ஓடிப் போனதால் ஏற்பட்ட இழப்பை நன்கு உணர்ந்திருக்கிறார் சிம்பு. விளைவு.. அடுத்தடுத்து புதிய படங்கள்.. புதிய கூட்டணிகள் என பரபரப்பாகக் கிளம்பிவிட்டார்.
நேரந்தவறாமை என்பதற்கு அர்த்தமே தெரியாமலிருந்த சிம்பு, இப்போது ஓரளவு அதைக் கடைப்பிடிக்க முயல்வதாகவும் சொல்கிறார்கள்.
இப்போது கவுதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் படங்களில் நடித்து வரும் அவர், பாண்டிராஜின் இது நம்ம ஆளு படத்தையும் கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டாராம்.
அடுத்து கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம் சிம்பு.
இதற்கிடையில் பருத்தி வீரன் மாதிரி ஒரு கிராமத்துக் கதையை இயக்குநர் அமீர் சொல்ல, அந்தக் கதை சிம்புவுக்கும் பிடித்துவிட்டதாம். நிச்சயம் நாம் இணைந்து இந்தப் படத்தைச் செய்யலாம் என்று கூறியிருக்கிறாராம். பண்ணையாரும் பத்மினியும் படத்தைத் தயாரித்த மேஜிக் பாக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருக்கிறதாம்.
Post a Comment