வடிவேலு காமெடி நாயகனாக நடித்துள்ள எலி திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியானது.
இந்தப் படம் வடிவேலுவின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும் படமாக இந்த எலி கருதப்படுகிறது.
மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடித்த தெனாலி ராமன் கடந்த ஆண்டு வெளியாகி, சுமாராகப் போனது. தான் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே வேதனையில் இருந்த வடிவேலு, அடுத்து அதே இயக்குநருடன் இணைந்த படம்தான் எலி.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சதா நடித்துள்ளார். வடிவேலுவுடன் நடிக்கும் ஆஸ்தான சிரிப்பு நடிகர்கள் பலரும் இணைந்துள்ளனர் இந்தப் படத்தில்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப் படம் இன்று உலகெங்கும் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்ட அரங்குகளில் எலி வெளியாகியுள்ளது.
வடிவேலு படம் என்றாலே குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலிராமன் போன்ற படங்களில் காமெடி குறைவாக இருந்தது என்ற குற்றச்சாட்டு, படத்தை கவிழ்த்துவிட்டது.
ஆனால் இந்த எலியில் எக்கச்சக்க காமெடி சமாச்சாரங்களைச் சேர்த்திருப்பதாக வடிவேலு கூறியுள்ளார்.
இன்று தெரிந்துவிடும்.. எலி கிச்சுகிச்சு மூட்டுகிறதா.. வயிற்றைப் பதம் பார்க்கிறதா? என்று.
Post a Comment