சென்னை: காலம் மிகவும் மாறிவிட்டது, முன்பு மாதிரியெல்லாம் நடிகர் நடிகைகள் இல்லை தாங்கள் சம்பாதித்த பணத்தை சினிமாவைத் தவிர்த்து புத்திசாலித்தனமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர். நடிகைகளில் நடிகை தமன்னா நகைக் கடை பிசினஸ் செய்து வருகிறார், டாப்சி தனது தோழிகள் மற்றும் தங்கையுடன் இணைந்து திருமணப் பொருட்களை சப்ளை செய்யும் துறைகளில் இறங்கியுள்ளார்.
நடிகர்களில் பல பேர் வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்தாலும் அது பெரும்பாலும் திருமண மண்டபம், நிலங்கள், மனைகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றையே நாடுகின்றனர். நடிப்பில் தன்னை மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசப் படுத்தி காட்டிய சீயான் விக்ரம் தற்போது தொழிலும் ஒரு வித்தியாசமான தொழிலில் குதித்து உள்ளார். ஆமாம் இந்தி நடிகர் அக்சய் குமார் மற்றும் நடிகை ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவருடன் இணைந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் " பிக் டீல் டிவி " என்ற 24 மணிநேர வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இதன் முதல் பார்வை இன்று வெளியிடப் பட்டது, இது ஒரு இலவச விளம்பர சேனலாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 18 ம் தேதி முதல் தமிழகத்தில் டிடி ஹெச் பொருத்தப்பட்டு உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த சேனலைப் பார்க்க முடியும். இந்த சேனலில் வீட்டு உபயோகப் பொருட்கள் தவிர்த்து அழகு பொருட்கள், உடை மற்றும் உடல்நலத்துக்குத் தேவையான பொருட்கள் முதன்மையானதாக விற்கப் படவுள்ளன.
நடிகர் நடிகைகள் பிஸினசுக்கு விளம்பரமே தேவையில்ல......
Post a Comment