மாசு படத்தில் சூர்யாவின் ஹேர் ஸ்டைலுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?

|

சென்னை: மூன்று முறை பெயர் மாற்றி, விளம்பரப்படுத்தி கடைசியில் படம் ஓடாததுதான் மிச்சம், மாசு என்கிற மாசிலாமணி படத்தைத் தான் சொல்கிறோம். முன்னணி ஹீரோயினான நயன்தாராவை வைத்து படத்தை எடுக்கின்றனர்.

கஜினி, ஆதவன் போல இதுவும் ஒரு வெற்றிப் படமாக மாறும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, கடைசியில் மிஞ்சியது ஏமாற்றம் தான். சரி, சரி பழசெல்லாம் கிளற வேண்டாம் மாசு படத்தில் சூர்யா அழகான ஹேர் ஸ்டைலிஷ்ட் போல குடுமி ஒன்று வைத்து இருப்பாரே, அதற்கு ரோல் மாடல் யார் தெரியுமா?

Maasu Movie : Who Is The Inspiration For Surya Hairstyle?

நம்ம கவுண்டமணி சார் தான் என்ன நம்ப முடியவில்லையா? இயக்குநர் வெங்கட் பிரபு அஜித் மற்றும் விஜய் படங்களின் வசனங்களை வைத்து மட்டும் தான் படத்தை எடுத்தார் என்று பார்த்தால், கடைசியில் நம்ம கவுண்டரின் தலையிலும் கையை வைத்து விட்டார்.

சிங்காரவேலன் படத்தில் டிரம்ஸ் சிவமணியாக நடித்து இருந்த கவுண்டமணி சாரின் அழகான ஹேர் ஸ்டைலைத் தான் மாசு படத்தில் சூர்யா பயன்படுத்தி இருக்கிறார், என்று ஆதாரத்துடன் போட்டோ போட்டு உண்மையை உலகத்துக்கு எடுத்து உரைத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் பேஸ்புக் பக்கத்தில் அதிகமான நபர்களால் ஷேர் செய்யப்பட்டு, லைக் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹேர் ஸ்டைலையுமா?

 

Post a Comment