சென்னை: இன்று வெளியாகிய நடிகர் வடிவேலுவின் எலி படம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இரண்டு ஆண்டுகள் கழித்து தெனாலிராமன் படத்திற்குப் பின் வடிவேலு நடித்து வெளிவந்திருக்கும் படம் எலி.
Watching #Eli .Decent start! Point to be noted is that even Vadivelu's voice during Tobacco Warning gets max cheer from kids..He neva fades!
— The Protagonist (@arvinfido) June 18, 2015 My colleague watching #Eli... says had huge expectations... it has not meet her expectations...boring at parts #Vadivelu ...
— Priyanka- Photos 4 U (@Photos4uIndia) June 19, 2015 தெனாலிராமன் படம் வெற்றி பெறவில்லை எனினும் அந்தப் படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளனுக்கு மீண்டும் வாய்ப்பளித்து, எலி படத்தை இயக்க வைத்தார் வடிவேலு. அவரின் நம்பிக்கையை நிரூபிப்பது போல எலி படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
600 க்கும் அதிகமான திரைகளில் எலி படம் திரையிடப் பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகிய நிலையில், படம் நன்றாக இருக்கிறது என்று படத்தைப் பார்த்தவர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
Now Watching #Eli pic.twitter.com/brVwgWwKxE
— பிரகாஷ் (@PrakashMahadev) June 19, 2015 #Eli First Half - Strictly for hardcore Vadivelu fans, who laughs for whatever he does.
— Common Man Sathish (@SathishMSK) June 19, 2015 பல இடங்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக எலி ஓடிக்கொண்டிருக்கிறது, வடிவேலுவின் காமெடி சிரிக்கும் விதமாக உள்ளது படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனவும் தகவல்களை அளித்துள்ளனர் ரசிகர்கள்.
எலி படம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் எலி படக்குழுவினர்.
Post a Comment