வாழும் காலம் முழுவதும் நடிகையாகவே தொடர ஆசை! - த்ரிஷா

|

சமூக வலைதளங்களின் மூலம் ஒருவர் மற்றவரைத் தொடர்பு கொள்வது என்பது மிகவும் எளிதாகி விட்டது. சில பேரின் தவறான நடத்தையால் சமூக வலைதளங்கள் மக்களிடம் அச்சத்தைத் தோற்றுவித்தாலும் தகவல் தொடர்புக்கு அது ஒரு மிகச் சிறந்த நவீன சாதனம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

முன்பெல்லாம் நடிக, நடிகைகளைப் பார்க்க வேண்டும் அவர்களுடன் பேச வேண்டுமென்றால் நேரடியாகப் பார்க்க முடியாது, கடிதம் எழுதினாலும் எல்லா ரசிகர்களுக்கும் ஒரே மாதிரி பதில்தான் கிடைக்கும். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது நடிகர் மற்றும் நடிகைகள் ட்விட்டர் போன்ற வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் தங்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாகவே பதில் அளிக்கின்றனர்.

Trisha krishnan Wants Continue Acting After Marriage

எந்தக் கேள்விக்கும் ஒளிவு மறைவின்றி பதில் அளிக்கின்றனர், அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு பதில் அளித்தார். நடிகைகளில் த்ரிஷா மற்றும் டாப்ஸி போன்றோர் பதில் அளித்தனர். சிம்பு மற்றும் டாப்ஸியை விட நடிகை த்ரிஷாவின் பதில்கள் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. #asktrishkrish என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் உருவாக்கி த்ரிஷா அவரது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அதில் ஒரு ரசிகர் இன்னும் 10 வருடங்கள் கழித்து நடிகையாக இருப்பீர்களா அல்லது குடும்பப் பெண்ணாக இருப்பீர்களா என்று கேட்டிருந்தார், அதற்கு த்ரிஷா அளித்த பதில் " எனது வாழ்நாள் முழுவதும் நான் நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். அதிகமான ரசிகர்கள் விஜய், அஜித் பற்றி கேட்டிருந்தனர். ராணாவுடனான நட்பு தொடரும் என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்து ராணாவுடனான நட்புத் தொடர்வதையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் நடிகை த்ரிஷா.

 

Post a Comment