பாகுபலி படத்தின் கனடா - அமெரிக்கா தமிழ்ப் பதிப்பு வெளியீட்டு உரிமையை ப்ளூ ஸ்கை சினிமா நிறுவனம் பெற்றுள்ளது.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி படத்தின் வெளியீட்டை உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.
இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது. அமெரிக்கா மற்றும் கனடா பகுதிகளில் தமிழ்ப் பதிப்பை ப்ளூ ஸ்கை சினிமா நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் தெலுங்கு, இந்தி, மலையாளப் பதிப்புகளை உலகெங்கும் வெளியிடும் உரிமை மற்றும் தொலைக்காட்சி, இணையதள வெளியீட்டு உரிமையையும் ப்ளூ ஸ்கை நிறுவனமே பெற்றுள்ளது.
ஜூலை 10-ம் தேதி வெளியாகும் இப்படத்தின், சிறப்புக் காட்சி 9-ம் தேதி திரையிடப்படுகிறது.
Post a Comment