மும்பை: பாடகர் மிகா சிங் டாக்டரை அறைந்தது சரி என்றும், அறை வாங்கிய நபர் குடிபோதையில் இருந்ததாகவும் பார்க்க தீவிரவாதி போன்று தெரிந்ததாகவும் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பாடகர் மிகா சிங் இரண்டு விஷயங்களுக்கு பெயர் போனவர். ஒன்று அருமையாக பாடுவார், மற்றொன்று அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இசை நிகழ்ச்சியில் மிகா சிங் கலந்து கொண்டு பாடினார்.
அந்த நிகழ்ச்சியின்போது அவர் மேடையில் வைத்து கண் டாக்டர் ஒருவரை அறைந்தார். அந்த வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறுகையில்,
அதிர்ச்சி
மிகா சிங் கைது செய்யப்பட்டார் என்பதை அறிந்து அப்படியே நான் ஷாக் ஆகிவிட்டேன். மிகா செய்தது மிகவும் சரியே. அவர் டாக்டரை அறைந்ததில் தவறு எதுவும் இல்லை.
டாக்டர்
நாங்கள் மலேசியாவில் இருந்தபோது மிகாவிடம் டெல்லியில் நடந்த சம்பவம் பற்றிய விவரங்களை கேட்டேன். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் குடிபோதையில் பெண் கலைஞர்களை கோபமடைய வைத்ததாக தெரிவித்தார்.
மிகா
அந்த டாக்டர் குடிபோதையில் மிகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியுள்ளார். அவர் பாதுகாவலர்களை பிடித்து தள்ளிவிட்டு மேடைக்கு வந்துள்ளார். உண்மையான ரசிகராக இருந்தால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மிகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கலாமே.
தீவிரவாதி
மிகா அறைந்த டாக்டர் பார்க்க தீவிரவாதி போன்று இருந்தார். யார் கண்டார், அவர் மனித வெடிகுண்டாகக் கூட இருக்கலாம். டாக்டர் விளம்பரத்திற்காக போலீசில் மிகா மீது புகார் கொடுத்ததிருக்கிறார் என்றார் ராக்கி சாவந்த்
ராக்கி
2006ம் ஆண்டு மிகா சிங் தனது பிறந்தநாள் பார்ட்டியில் ராக்கி சாவந்தின் உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கினார். அவர் எப்படி முத்தம் கொடுக்கலாம் என்று பொங்கி எழுந்த ராக்கி மிகா மீது போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment