சென்னை: உலக அளவில் பிரசித்தி பெற்றவை ஜேம்ஸ்பாண்ட் படங்கள். அதிரடி சாகசங்களும் அட்டகாசமான காட்சிகளும் கலந்து பார்ப்பவர்களின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டவை இந்தப் படங்கள்.
ஜேம்ஸ்பாண்டின் ஹீரோக்கள் அவ்வபோது மாறிக் கொண்டே இருப்பார்கள். அந்தப் பாத்திரத்திற்குத் தகுந்த நபரை சல்லடை போட்டு சலித்தெடுத்து சமீபத்தில் தான் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் அடுத்த ஹீரோவை தேர்வு செய்தனர் ஹாலிவுட்டினர்.
உலக அளவில் புகழ்பெற்ற அந்த ஜேம்ஸ்பாண்ட் படம் தமிழில் எடுக்கப்பட்டால் அதற்கு பொருத்தமான ஹீரோவாக யார் இருப்பார்கள் என்று ஒரு கேள்வியை சென்னை மக்களிடம் கேட்டபோது அவர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்களை வீடியோவாக்கி யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்களிடம் எக்கசக்கமான வரவேற்பைப் பெற்று வரும் அந்த வீடியோவில் தமிழில் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க பொருத்தமானவர் அஜித், விஜய், விக்ரம் மற்றும் தனுஷ் என்று பெரும்பாலான மக்கள் பதிலளித்து உள்ளனர்.
ஜேம்ஸ்பாண்டின் ஜோடியாக நயன்தாரா மற்றும் சன்னி லியோன் ஆகியோர் மிகப் பொருத்தமாக இருப்பார்கள் என்று சிலர் பதிலளித்து உள்ளனர். ஒரு சிலர் நடிகர் ஹிருத்திக்ரோஷனுக்கு வாக்களித்து அவரையும் தமிழ் நடிகராக மாற்றி உள்ளனர்.
சுவாரஸ்யமான பதில்களால் நிரம்பி வழியும் இந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்...
Post a Comment