உலகமே பெரும் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் பாடல்களை யாரோ திருட்டுத்தனமாக இணையத்தில் கசியவிட்டுள்ளனர்.
பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பாகுபலி படத்தை எஸ்எஸ் ராஜமௌலி பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டு, யூடியூப்பில் அதிக பார்வையாளர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.
இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை ஜூன் 13ம் தேதி திருப்பதியில் பிரம்மாண்டமாக விழா நடத்தி வெளியிடவுள்ளனர்.
ஆனால் அதற்கு முன்பாகவே, இப்படத்தின் பாடல்களை இணையதளத்தில் திருட்டுதனமாக ரிலீஸ் செய்துவிட்டனர். மேலும் சமூக வலைதளங்களிலும் இப்படத்தின் பாடல்கள் வேகமாக பரவி வருகின்றன.
ஏற்கெனவே படத்தின் 10 நிமிடத்துக்கு மேற்பட்ட முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிந்தது நினைவிருக்கலாம்.
Post a Comment