லாஸ் ஏஞ்செல்ஸ்: 56 வயதாகும் பாப் பாடகி மடோனா நான்தான் மடோனா என்னும் பொருள் வரும்படி உள்ள ஒரு பாடலை இரு தினங்களுக்கு முன்னர் இணைய தளத்தில் வெளியிட்டார்.
மடோனாவுடன் ஹாலிவுட் பிரபலங்களான ரிடா ஒரா, கிரிஸ் ராக், நிகி மினாஜ், மற்றும் மிலி சைரஸ் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த இந்தப் பாடலை எழுதி நடித்திருக்கிறார் மடோனா.
இது(Rebel Heart) மடோனாவின் 13 வது ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது. பிங்க் கலரில் உடையணிந்து ஆடிப் பாடி கலக்கி எடுத்திருக்கிறார் மடோனா. பெண்கள் குறித்து ஒரு பெண் சொல்வது போல இந்தப் பாடலின் வரிகள் அமைந்து உள்ளன.
நான் முட்டாள் என்று நினைக்கவில்லை, எனக்கு காவல் துறையின் பாதுகாப்பு தேவையில்லை , அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. முதன்முதலில் நான் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்ற போது பெண்களைக் குறித்து அவர்கள் உபயோகப்படுத்திய வார்த்தையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒவ்வொருவரின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் வேறு தான், ஆனால் பெண் என்பவள் உடலுறவுக்கான வெறும் போகப்பொருளாக மட்டுமே இங்கு எண்ணுகிறார்கள்.
நான் ஒரு பெண் நான் கூறுகிறேன் நான் மிகவும் வலிமையாக இருக்கிறேன், குழப்பமற்றவளாக மற்றும் கடுமையுடன் இருக்கிறேன். நீங்கள் செக்ஸ் மட்டுமே வெறும் வாழ்க்கை என்று எண்ணாதீர்கள், அதைத் தவிர்த்து வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன கேட்பதற்கு அதனைக் கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன்" என்று பெண்களை உயர்வாக கருதியும், பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே எண்ணாதீர்கள் என்று பெண்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததும் மடோனா இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இணையத்தில் வைரலாக மாறி இருக்கிறது இந்தப் பாடல்.
Post a Comment