சென்னை: ஜூலை 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள்.
இது தொடர்பாக நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை மாதம் 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் புதன்கிழமையாக உள்ளது. அதற்குப் பதிலாக அடுத்து வரும் விடுமுறை நாள்களில் நடத்தவும், தேர்தலில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதைத் தடுக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர் நீதிபதிகள். திரையுலகில் பெரிய சங்கமான நடிகர் சங்கத்தின் ஒரு பகுதியினர் விஷாலுக்கு ஆதரவாக இருப்பதால், இந்த முறை சரத்குமார் - ராதாரவி அணிக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக திரையுலகில் பேச்சு நிலவுகிறது.
Post a Comment