சென்னை: என்னம்மா இப்படிப் பண்றிங்களேம்மா இந்த டயலாக்க சொன்னா எவ்வளவு சீரியசான விஷயமா இருந்தாலும் அது காமெடியா மாறிடுது, எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிடுறாங்க.
ஒரு ஆதங்கத்தில நம்ம லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம், தான் நடத்திய சொல்வதெல்லாம் உண்மைங்கிற நிகழ்ச்சியில சொன்னத இந்த விஜய் டிவி காரங்க காமெடியா மாத்திவிட இப்போ ஊரே அந்த டயலாக்க பேசி எல்லா சமூக வலைதளங்களிலும் வைரலாக்கி விட்டுட்டாங்க.
ஒரு படம் இல்லே ஒரு பாட்டு இது மூலமா தமிழ் சினிமாவில புகழ் பெற்றவங்கள பாத்துருக்கோம். ஆனா ஒரே ஒரு டயலாக் அதுவும் எண்ணி மூணே வார்த்தை ஒருத்தவங்க வாழ்க்கையையே மாற்றியது ஆச்சரியம்தான்.
என்னம்மா இப்படிப் பண்றிங்களேம்மா இந்த ஒரே ஒரு டயலாக்கால அந்த நிகழ்ச்சியை நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போ அதையே டைட்டிலா வச்சு ஒரு புது நிகழ்ச்சியையே நடத்துற அளவுக்கு முன்னேறிட்டாங்க.
ஒருபக்கம் நம்ம சூர்யா தன்னோட படத்துல இந்த டயலாக்க பேச, இன்னொருபக்கம் சிவகார்த்திகேயனோட ரஜினிமுருகன் படத்துல ஒரு பாட்டையே இந்த டயலாக்க வச்சு எடுக்க நாம சொன்ன வார்த்தைக்கு ஊருக்குள்ள இவ்ளோ மதிப்பான்னு யோசிச்ச லட்சுமி மேடம் இந்த டயலாக்கோடா ஓனரே நான்தான் நாம ஏன் இதை வச்சு ஏதாவது பண்ணக் கூடாதுன்னு இப்போ சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில இருந்து வெளியேறி இப்போ "என்னம்மா இப்படிப் பண்றிங்களேம்மா"ன்னு சொந்தமா நிகழ்ச்சி நடத்தப் போறாங்க.
அவங்களுக்குப் பதிலா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிய தொடர்ந்து நடத்த வந்து விட்டார் மயூரி படப் புகழ் சுதா சந்திரன். டிவி சீரியல்களில் நடித்து வந்தவரான சுதா தற்போது இந்த ரியாலிட்டி டாக் ஷோவுக்கு வந்துள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
என்னம்மா இப்படிப் பண்ணிட்டிங்களேமா......!
Post a Comment