கமலின் குறுஞ்செய்தியால் மகிழ்ந்து போன மலையாள இயக்குநர்

|

சென்னை: உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ரம்ஜான் தினத்தன்று திரைக்கு வர இருக்கும் படம் பாபநாசம். மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம்.

மலையாளத்தில் திரிஷ்யம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜீது ஜோசப்பே தமிழில் பாபநாசம் படத்தை இயக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப் அலைபேசியில் ஒரு குறுந்தகவல் மின்ன எடுத்துப் பார்த்த ஜீது மகிழ்ச்சியில் மிதந்து இருக்கிறார்.

Kamal Hassan  not Interfere With My Work : Jeethu Joseph

காரணம் அந்தச் செய்தியை அனுப்பியது உலகநாயகன் கமல். படப்பிடிப்பிற்கு முன்பு நிறைய பேர் கமல் படமா அவர் நிறைய விஷயங்களில் தலையிடுவார் என்று ஜோசப்பை பயமுறுத்தி விட்டனராம். இதனால் படம் முடிவடையும் வரை ஒருவித படபடப்புடனே இருந்த ஜீது உங்களுடன் பணியாற்றியது ஐ.வி.சசியுடன் பணியாற்றியது போலவே இருந்தது என்ற கமலின் குறுஞ்செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியில் அழுதே விட்டாராம்.

மேலும் படப்பிடிப்பின் போது ஒரு சில ஆலோசனைகள் சொன்னது தவிர வேறு எதிலும் கமல் தலையிடவில்லை என்று உலகநாயகனின் பெருந்தன்மையை பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார்.

 

Post a Comment