இரண்டு தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற காக்கா முட்டை படம் மேலும் இரு விருதுகளை வென்றுள்ளது.
இத்தாலி நாட்டில் மிலன் நகரில் நடைபெற உள்ள 25-வது ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க திரைப்பட விழாவில் சிறந்த உள்நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலித்த படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
காக்கா முட்டை படத்தை மணிகண்டன் இயக்கியிருக்கிறார். தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோ மல்லூரி, சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சென்னை குடிசைப் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள், மேல்தட்டு மக்கள் மட்டுமே உண்ணும் உணவாக கருதக்கூடிய பீட்சாவை வாங்கி சாப்பிட படும் பாடுகள்தான் கதை.
படம் உலகெங்கும் நாளை வெளியாகிறது.
Post a Comment