விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது எது நிகழ்ச்சியை குடியாத்தம் கிராமத்தில் நேரடியாக நடத்தச் சென்ற மாகாபா ஆனந்தைப் பார்த்து ஐலவ்யூ சொல்லி நெகிழவைத்துள்ளனர் கிராம குட்டீஸ்கள்.
ஸ்டுடியோவுக்குள் சின்னத்திரை பிரபலங்களை வரவழைத்து நிகழ்ச்சி நடத்திய அது இது எது குழுவினர் முதன் முறையாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நேரடியாக களம் இறங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு கிராமமக்கள் பெருந்திரளாக வந்திருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அது இது எது குழுவினர் வடிவேல் பாலாஜி உள்ளிட்டோர் மேடையில் ஏறிய உடன் கிராமத்தினரையே உற்சாகம் கரைபுரண்டது. மேடை ஏறிய மதுரை ராமர் தனது வழக்கமான டயலாக்கான, "என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்று ஆரம்பித்த உடன் பார்வையாளர்களிடையே எழுந்த கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது. போலீசை கூப்பிடுவேன்... போலீசை கூப்பிட்டு வந்திருவேன் என்று கூறி முடித்தார் மதுரை ராமர்.
சிரிச்சா போச்சு குழுவினரின் அறிமுகம் முடிந்த உடன், பார்வையாளர்கள் வரிசையில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. கூட்டத்தில் இருந்த ஒரு சுட்டிப்பெண், மைக்கில் மாகாபா அங்கிள் ஐலவ்யூ என்று கூறினார். கூடவே ஒரு குட்டிப்பெண் என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்று கூறி அசத்தி நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கினார்.
ஸ்டார் விஜய் டிவியில் சனிக்கிழமைதோறும் மாலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அது இது எது... இதுவரை 300 வாரங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கிய சிவகார்த்திக்கேயன், தற்போது சினிமாவில் பிரபல நடிகராகிவிட்டார். அவருக்குப்பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாகாபா ஆனந்த், அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். குடியாத்தம் கிராமத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நேரடியாக நடத்தப்பட்ட அது இது எது நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
Post a Comment