சென்னை: நடிகர் தனுஷிற்கும் வடசென்னைக்கும் அப்படி என்ன ராசியோ, தொடர்ந்து தனது படங்களில் வடசென்னை பையனாகவே நடிக்கிறார். நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன், புதுப்பேட்டை, அநேகன் மற்றும் சுள்ளான் படங்களைத் தொடர்ந்து மாரி படத்திலும் லோக்கல் சென்னைப் பையனாகவே நடித்திருக்கிறார் தனுஷ்.
மாரி படத்தில் கதைப்படி புறா ரேஸில் கலந்து கொள்பவராக நடித்திருக்கிறார் தனுஷ். புறா ரேஸில் கலந்து கொண்டு ஏற்படும் மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை தனுஷ் எப்படிச் சமாளிக்கிறார் என்பதை காதலுடன் இணைத்துக் கூறியிருக்கிறாராம் இயக்குநர் பாலாஜி மோகன்.
மேலும் புறா ரேசைத் தவிர்த்து படத்தில் நிறைய விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன், தனுஷை இந்தப் படம் நிச்சயம் மாஸ் ஹீரோவாக உயர்த்திக் காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் பாலாஜி மோகன்.
வடசென்னை என்ற பெயரிலேயே தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒருபடம் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment