எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி ட்ரைலருக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தெலுங்கு மற்றும் தமிழில் நேரடியாக உருவாகியுள்ள பாகுபலி படம் இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்த்து பிரமித்து நிற்கிறார்கள் பிற மொழி படைப்பாளிகள்.
பிரபல ஹாலிவுட் ட்ரைலர் விமர்சகரான கிரேஸ் ராண்டால்ப், இந்த ட்ரைலர் மிக பிரமாதமாக வந்திருப்பதாகவும், இந்த ட்ரலரில் வரும் இயற்கைக் காட்சிகள் தன்னை இந்தியாவுக்குச் செல்லத் தூண்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு காட்சியையும் பிரமித்து பாராட்டியுள்ள இந்த விமர்சகர், சர்வதேச மார்கெட்டில் இந்தியப் படங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாக பாகுபலி வருகை அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
Post a Comment