'வைகை எக்ஸ்பிரஸ்': அமெரிக்கா போய் சேஸிங் பயிற்சி கற்ற ஆர்கே!

|

ஷாஜி கைலாஷ் இயக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் சண்டைக் காட்சிக்காக அமெரிக்கா போய் சேஸிங் கற்று வந்திருக்கிறார் ஆர்கே.

மக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்.கே.ஹீரோவாக நடிக்கிறார். நீது சந்திரா, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.

RK takes special chasing training for Vaigai Express

படம் பற்றி ஆர்.கே.விடம் கேட்டபோது கூறியதாவது, "இந்த படத்தில் சேசிங் காட்சி ஒன்று இடம்பெறுகிறது . இதை ஹாலிவுட் தரத்தில் எடுக்க திட்டமிட்டோம். அப்படிப் பண்ணவேண்டுமென்றால் இந்தந்த பயிற்சிகள் தேவை என்று கனல் கண்ணன் மாஸ்டர் சொன்னார்.

அவர் சொன்னதை அடுத்து அமெரிக்கா சென்றேன். அங்கு நியூயார்க் அருகில் க்ரீன்பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்டன்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்றேன். அங்கு பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சி எடுத்தேன்.

5 நாட்கள் நடந்த இந்தப் பயிற்சியில் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அது மட்டுமல்லாமல் அந்த சேசிங் காட்சிக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்தேன். படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இந்த சேசிங் காட்சியும் ஒன்றாக இருக்கும். விரைவில் அந்த காட்சிப் படமாக்கப்பட இருக்கிறது. அத்துடன் படத்தின் ஷுட்டிங் முடிவடைகிறது," என்றார்.

 

Post a Comment