சென்னை: தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக 1990 களில் விளங்கியவர் நடிகை மீனா. பிரபல தொழில் அதிபரைத் திருமணம் செய்து கொண்ட நடிகை மீனாவுக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.
5 வயதான இந்தக் குழந்தையை தற்போது சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்தத் திட்டமிட்டுள்ளார் நடிகை மீனா. அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒரு குழந்தை தேவைப்பட மீனாவை கேட்டதற்கு அவர் சரி என்று கூறிவிட்டாராம்.
சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரு நாயகிகளுடன் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் விஜயின் மகளாக அறிமுகமாகிறார் மீனாவின் மகள் நைனிகா. மீனா விஜயுடன் சேர்ந்து நடித்ததில்லை எனினும் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு இருவரும் இணைந்து ஆடியிருக்கின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, பின்பு அவருடன் இணைந்து எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment