மாம்பழம் கொடுத்து நட்பு வளர்க்கும் பவன் கல்யாண்!

|

ஹைதராபாத்: சினிமாவில யாராவது தனக்குப் பிடிச்சவங்களுக்குப் பரிசு கொடுக்கணும்னா வாட்ச், மோதிரம், கார்.. இப்படி எதையாவது தருவார்கள்.

ஆனா நம்ம தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு கூடை நிறைய மாம்பழங்களை இயக்குநர் பாபிக்கு அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாம்பழம் எல்லாம் ஒரு பெரிய விஷயமான்னு கேட்காதிங்க.

Pawan Kalyan surprises Bobby

ஏன்னா இது பவர் ஸ்டாரோட தோட்டத்தில இயற்கை முறையில் விளைய வைத்த மாம்பழங்களாம். வருடாவருடம் இந்தப் பழங்கள் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வீட்டிற்க்கு செல்லும். சமீப காலமாக தனக்கு பிடித்தவர்களுக்கும் இந்த மாம்பழங்களை அனுப்பி வைக்கிறாராம் பவன் கல்யாண்.

இந்த வகையில் தெலுங்கின் இளம் ஹீரோ நிதினும் பவனிடம் இருந்து அன்புப் பரிசாக மாம்பழங்களைப் பெற்று இருக்கிறார்.

கப்பார் சிங் 2 படத்தின் இயக்குநர் பாபி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கூடை நிறைய மாம்பழங்கள், பவர் ஸ்டாரிடம் இருந்து எனக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி," என்று உற்சாகமாக ட்வீட்டியுள்ளார்.

 

Post a Comment