சென்னை: அடுத்தடுத்து இரு காதல்கள் தோல்வியில் முடிந்ததால் நொந்து போயிருந்த சிம்பு தற்போது எனது திருமணம் கடவுளின் விருப்பபடி நடக்கும் என்று பீலிங்க்ஸ் காட்டியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் இளம் நடிகரான சிம்பு முதலில் நயன்தாராவை வல்லவன் படத்தின் போது உருகி உருகி காதலித்தார், பிரேக் அப் ஆனது தான் மிச்சம்.
மீண்டும் நடிகை ஹன்சிகாவை வாலு திரைப்படத்தின் போது காதலித்தார் , என் வாழ்க்கையே உன்னோடுதான் என்று இருந்த இருவருக்கும் இடையில் என்ன நடந்ததோ முதல் வாரம் காதலிக்கிறேன் என்று மீடியாவைக் கூப்பிட்டு சொன்னவர்கள் மறுவாரம் பிரிந்து விட்டோம் என்று அதே மீடியாவின் வாயிலாக அறிவித்துப் பிரிந்தார்கள்.
எந்த நல்ல நேரத்தில் வாலுவுக்கு பூஜை போட்டார்களோ படம் இன்னும் வெளிவராமல் இதோ அதோ என்று பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்து விட்டது, இன்னும் வெளியானபாடில்லை. இந்தியாவிலேயே முதல்முறையாக பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்த படம் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வாலு ஆளாகி விட்டது.
காதலி திரையுலகின் நம்பர் ஒன் நாயகியாக வலம்வர நாயகன் படம் வெளியாவதே பெரும்பாடாக உள்ளது, இந்நிலையில் சிம்பு சமூக வலைதளமொன்றில் அவரின் ரசிகர்கள் கேள்வி கேட்டதற்கு கடவுளின் விருப்பப்படி எனது திருமணம் நடைபெறும் என்று தற்போது கூறியிருக்கிறார்.
நடக்குமா நடக்காதா... !?!
Post a Comment