நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.. இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்... - இது நீதி படத்தில் கவியரசர் எழுதிய பாட்டு வரிகள்.
அதன் முதல் வரியை எடுத்து ஒரு படத்துக்கு தலைப்பாக்கியிருக்கிறார்கள். 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' - இதுதான் படத் தலைப்பு.
குடிக்கு எதிரான படம் என்பது தலைப்பிலேயே தெரிந்துவிட்டதல்லவா... ஆனால் சுவாரஸ்யமே இந்தப் படத்தின் ஸ்டில்கள்தான். சாம்பிளுக்கு சில இங்கே தந்திருக்கிறோம் (குடியே கதி என்று கிடப்பவர்களைக் கூட தெறித்து ஓடும்படியான ஆவேச புகைப்படங்கள் இவை).
இயக்குனர் ஆர். பாண்டியராஜின் டபுள்ஸ் மற்றும் பல இயக்குகனர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா இந்தப் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.
ராஜ், காந்தராஜ், சம்ர்த்தின், பனிமதி போன்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். முதல் கட்ட படபிடிப்பு இதுவரை படபிடிப்பே நடந்திராத கள்ளக்குறிச்சி மற்றும் சின்ன சேலம் அருகே உள்ள வாசுதேவனூர், ராயப்பனூர், எலித்தூர் போன்ற எதார்த்தம் மாறாத கிராமப்புறங்களில் நடந்து முடிந்துள்ளது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு "புன்னகை" வெங்கடேஷ், இசை ஆர்.சிவசுப்புரமணியன்.
பைத்தந்துறை, தென் செட்டியந்தல், நமச்சிவாயபுரம் ஆகிய கிராமப்பகுதிகளில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் திரைக்கு வருகிறது நாளை முதல் குடிக்க மாட்டேன்!
Post a Comment