பிறந்த நாளை முன்னதாக கொண்டாடும் இளையதளபதி விஜய்

|

சென்னை: வரும் ஜூன் 22 ம் தேதி 40 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார் இளைய தளபதி விஜய். கடந்த சில வருடங்களாக பிறந்தநாள் தினத்தில் நடந்த மோசமான நிகழ்வுகள் காரணமாக இந்த வருடம், சென்னையில் பிறந்த நாள் கொண்டாடுவதைத் தவிர்த்து வெளிநாடு செல்லும் திட்டத்தில் இருக்கிறார் விஜய்.

விஜயின் இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும், வழக்கம் போல அவரது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுத்து உள்ளனர் அவரது ரசிகர்கள்.

இதே போல அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை அவரது பிறந்த நாள் அன்று வெளியிடத் திட்டமிட்டு இருந்தனர் புலி படக் குழுவினர். ஆனால் தற்போது அதில் ஒரு சிறிய மாற்றம் செய்து புலி படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை முன்னதாகவே வெளியிட முடிவு செய்து உள்ளனர்.

புலியின் பர்ஸ்ட் லுக் 20 ம் தேதி நள்ளிரவிலும், டீசர் 21 ம் தேதி இரவு நள்ளிரவிலும் வெளியாகிறது என்று டிவிட்டரில் அறிவித்துள்ளது சோனி மியூசிக். சோனியின் இந்த அறிவிப்பால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் தற்போது சோனியின் இந்த செய்தியை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் நாளன்று #pulifirstlook என்று ஹெஷ்டேக்கை உருவாக்கி அதனை டிவிட்டரில் ட்ரெண்டாக்கவும் முடிவு செய்து உள்ளனராம் விஜய் ரசிகர்கள்.

 

Post a Comment