நகைக்கடை துபாயில் திறந்தாலும், விளம்பரத்துக்கு நயன்தான் வேணுமாம்!!

|

சென்னை: நயன்தாரா என்ன செய்தாலும் அது இலவச விளம்பரமாகி விடும் இந்த வேளையில் நிஜமாகவே அவர் ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

சில ஆண்டு இடைவேளைக்குப் பின் அவர் தற்போது ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் துபாயில் திறக்க விருக்கும் புதிய ஷோரூமின் விளம்பரத் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Nayanthara endorses GRT Jewellers

விளம்பர உலகின் பிரபல இயக்குநர் பாபு சங்கரின் இயக்கத்தில் இந்த விளம்பரம் உருவாகி உள்ளது. கல்யாண் ஜுவல்லர்ஸ் தனது விளம்பரத் தூதர்களாக நடிகர்கள் பிரபு, அமிதாப், விக்ரம் பிரபு, நாகர்ஜுன் மற்றும் நடிகைகளில் மஞ்சு வாரியர், ஐஸ்வர்யாராய் என்று மாநிலத்துக்கு ஒருவரை ஏற்கனவே குத்தகைக்கு எடுத்திருக்கிறது.

மற்ற நகைக்கடை விளம்பரங்களில், நடிகர் மாதவன் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் நடிகர் விஜய் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். மலபார் கோல்டுக்காக நடிகை காஜல் அகர்வால், ஜுவல் ஒன்னில் நடிகை ஸ்ருதி ஆகிய நடிகைகளுடன் தற்போது நயன்தாராவும் நகைக்கடை விளம்பரத்தில் இணைந்திருக்கிறார். 6500 சதுர அடியில் துபாயில் ஜி.ஆர்.டியின் சர்வதேச ஷோரூம் முதல் முறையாகத் திறக்கப் பட்டுள்ளது.

துபாயில் கடை திறந்தாலும் அதுக்கும் கூட நயன்தாரா தேவைப்படறாங்க பாத்தீங்களா!

 

Post a Comment