சென்னை: தொடர்ந்து பேய் படங்களே ஆட்சி செய்து வந்த தமிழ் சினிமாவில் கடந்த வாரம் சற்று வித்தியாசமாக இரண்டு படங்கள் வெளியாகின. நடிகர் ரவியின் ரோமியோ ஜூலியட் காதலை நம்பியும், சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படம் காமெடியை நம்பியும் எடுக்கப் பட்டு வெளிவந்தது.
அதுதான் பேய்ப் படங்களிலேயே காமெடியைப் பார்க்கிறோமே தனியாக எதற்கு ஒரு காமெடிப் படம் என்று ரசிகர்கள் நினைத்து விட்டார்கள் போலும், காதல் படமான ரோமியோ ஜூலியட்டிற்கு தங்கள் ஒட்டுமொத்தஆதரவையும் அளித்து படத்தை வெற்றிப்படமாக மாற்றி இருக்கிறார்கள்.
ரோமியோ ஜூலியட் படம் காதலை சொன்ன விதத்தில் சற்றே சொதப்பினாலும், கலேக்ஷனில் வெற்றி பெற்று ஜெயம் ரவியைக் காப்பாற்றி இருக்கிறது. ஆமாம் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தப் படங்களும் வெளிவராமல் துவண்டிருந்த ஜெயம் ரவிக்கு உற்சாகத்தை அளித்து அவரின் மார்க்கெட்டையும் உயர்த்தி இருக்கிறது.
படம் வெளியாகி இன்றோடு 6 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை சுமார் 9 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. இந்த வெற்றியால் இதுவரை ஜெயம் ரவி நடித்து வெளிவராமல் இருந்த அப்பாடக்கர் மற்றும் பூலோகம் படங்களை வெளியிட சம்பந்தப்பட்ட படக்குழுவினர் முழுமூச்சாக இறங்கியுள்ளனராம்.
Post a Comment