உப்புக் கருவாடு படத்தின் டீசரை வெளியிட்ட ஜோதிகா

|

சென்னை: இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ள உப்புக் கருவாடு படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப் பட்டது.

உப்புக் கருவாடு என்ற தலைப்பே படத்தின் மீது அனைவரின் கவனத்தையும் திருப்பிய நிலையில் மேலும் ஒரு நிகழ்வாக நடிகை ஜோதிகா படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

Uppu Karuvadu Teaser Released

அபியும் நானும், மொழி, பயணம் போன்ற சிறந்த படங்களை தமிழ்த் திரையுலகிற்கு அளித்த இயக்குநர் ராதாமோகனின் அடுத்தப் படமாக உப்புக் கருவாடு தயாராகியுள்ளது. இயக்குநர் ராதா மோகனின் மொழி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய ஜோதிகா, திருமணத்திற்குப் பின் மிக நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அதன் முதல் படியாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கும் ஜோதிகா, தன்னை நல்ல நடிகையாக உலகுக்கு அடையாளம் காட்டிய இயக்குனர் ராதா மோகனின் உப்புக் கருவாடு டீசரை வெளியிட்டுள்ளார். படத்தின் தலைப்பைப் போலவே டீசரும் மக்களைக் கவரும் என்று படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Uppu Karuvadu Teaser Released

வழக்கமாக ராதாமோகனின் படங்களில் நடிக்கும் பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அதற்குப் பதிலாக நந்திதா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் மயில்சாமி சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.

 

Post a Comment