ரோமியோ ஜூலியட் படத்தை திருட்டு வீடியோ எடுத்த மூவர் கைது

|

கோவை: ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்து நேற்று வெளியான ரோமியோ ஜூலியட் படத்தை திருட்டுத் தனமாக வீடியோ எடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு உடையாம்பாளையம் சாலையில் உள்ள தியேட்டரில் ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று முதல்காட்சி படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, படம் பார்த்துக் கொண்டிருந்த 2 பேர் திரையில் ஓடிய படத்தை வீடியோ காமிராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த சிலர் இது குறித்து தியேட்டர் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

Romeo Juliet video piracy: 3 arrested at Kovai

உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தியேட்டருக்கு விரைந்து வந்து 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் பெயர் சுப்புராஜ், கண்ணன் என்றும் மதுரையைசு சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்களுக்கு உதவியாக தியேட்டர் ஊழியர் செல்வம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் பிடித்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

இவர்கள் வீடியோ காமிரா மூலம் திரையில் படத்தை வீடியோ எடுத்து திருட்டு சி.டி. தயாரித்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து லேப்டாப், வீடியோ காமிரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Post a Comment