தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பணியாற்றப் போகும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவர் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் நடிப்பவர்கள் யார் யார் என்ற விவரம் மட்டும் வெளியாகவில்லை.
குறிப்பாக கதாநாயகி யார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
படத்தில் முதலில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டது. பின்னர் ஜோடி உண்டு, டூயட் இல்லை... நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்றெல்லாம் செய்தி பரவி வந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டபோது, 'படத்தின் கதாநாயகி உண்டு. ஆனால் அவர் யார் என்பதை விரைவில் அறிவிக்கிறோம். நிச்சயமாக நயன்தாரா இந்தப் படத்தில் நாயகி அல்ல.." என்றார்.
இந்த நிலையில்தான், இந்தப் படத்தில் வித்யா பாலன் நாயகியாக நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது.
ஏற்கெனவே கோச்சடையான், ராணா படங்களில் வித்யா பாலன் நடிப்பதாக இருந்து பின்னர் அது நடக்காமல் போனது.
Post a Comment