என்னம்மா இப்படி இப்படி இப்படி பண்றீங்களேம்மா... - ரஜினிமுருகன் பாட்டுக்கு ஒரு எதிர்ப்பாட்டு!

|

சில நேரங்களில் ஒரே கதையை இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ படமாக எடுத்து, ஒரே நேரத்தில் வெளியிடுவதுண்டு.

பெரும்பாலும் முன்கூட்டித் திட்டமிட்டு நடப்பதல்ல இது. இவருக்குத் தெரியாமல் அவர், அவருக்குத் தெரியாமல் இவர் என படமாக்கி, வெளியிடும்போதுதான் ஒரே கதை என்பது தெரிய வரும்.

இப்போது இது ஒரு பாடல் விஷயத்திலும் நடந்திருப்பதுதான் சுவாரஸ்யமான ஆச்சர்யம்.

One more Ennamma Ippadi Pandringalemma... song in Kollywood

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா..!' என்ற வாக்கியம் சினிமாவில் மட்டுமல்ல, வெகுஜனங்கள் மத்தியிலும் படுபிரபலம். எதற்கெடுத்தாலும், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. என்று கேட்டு வெறுப்பேற்றுகிறார்கள்.

இந்த வாக்கியத்தை வைத்து ஒரு பாடலையும் இமான் இசையில் ரஜினிமுருகன் படத்துக்காக போட்டிருக்கிறார்கள். அந்தப் பாடல் வெளியாகு படு ஹிட் ரகத்தில் சேர்ந்துவிட்டது.

இந்த நிலையில் இன்னும் ஒரு பாட்டு இதே வாக்கியத்துடன் ஆரம்பிக்கிறது. இந்தப் பாடலை வளர்ந்துவரும் பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதியிருக்கிறார். இஷான் தேவ் இசையமைத்து, அந்தோனிதாசனுடன் பாடியிருக்கிறார் (காசு பணம் துட்டு, வருத்தப்படாத வாலிபர் சங்கம்... போன்ற பாடல்களைப் பாடியவர்).

One more Ennamma Ippadi Pandringalemma... song in Kollywood

என்னம்மா இப்படி இப்படி இப்படி பண்றீங்களேம்மா... என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல், இமான் இசையில் வெளியாகியுள்ள ரஜினி முருகன் பாட்டை விட செம குத்து ரகமாக உள்ளது.

ரஜினிமுருகன் பாட்டுக்கு இது போட்டியா? என்று பாடலாசிரியர் முருகன் மந்திரத்தைக் கேட்டபோது, "அப்படியெல்லாம் இல்லை. உண்மையில் ரஜினி முருகன் படத்தில் இப்படியொரு பாட்டு இடம்பெற்றுள்ளதா என்றே தெரியாதபோதே இந்தப் பாடலை தயார் செய்துவிட்டோம். ட்யூன் போட்டு பாட்டெழுதி பதிவு செய்து வைத்திருந்த நிலையில்தான், இந்த வாரம் ரஜினி முருகன் பாடல் வந்தது. இது ஒரு கோ இன்சிடென்ஸ் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல..." என்றார்.

சாரல் என்ற படத்துக்காக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர் முருகன் மந்திரமும் இஷான் தேவும்.

 

Post a Comment