காதலில் விழுந்தேன் நகுல் பிறந்த தினம் இன்று

|

சென்னை: 2003 ல் இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமான நகுல் இன்று தனது 30 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். தமிழின் இளம் ஹீரோக்களில் ஒருவரான நகுல் நடிகை தேவயானியின் தம்பி. மும்பை மண்ணில் 1984 ம் ஆண்டு பிறந்த நகுலின் முழுப் பெயர் நகுல் ஜெய்தேவ்.

18 வயதில் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமான நகுல் இந்த 12 வருடங்களில் வெறும் 8 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். வருகின்ற எல்லா வாய்ப்புகளையும் ஏற்காமல் படங்களைத் தேர்ந்தெடுத்து மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

காதலில் விழுந்தேன் படத்தில் சிங்கிள் ஹீரோவாக அறிமுகமான நகுல் தொடர்ந்து மாசிலாமணி, வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த தமிழுக்கு எண் 1 அழுத்தவும் நடிக்கத் தெரிந்த நடிகர் என்ற பெயரை நகுலுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை செய்தது.

Nakul Turns 30

நடிகர் மட்டும் அல்லாது நகுல் ஒரு சிறந்த பின்னணிப் பாடகரும் கூட, ஹாரிஸ் ஜெயராஜ், தமன், விஜய் ஆண்டனி, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தீனா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாடியுள்ளார்.

தற்போது அமளி துமளி மற்றும் நாரதன் போன்ற படங்களில் நடித்து வரும் நகுல் தமிழில் அழுத்தமாக ஒரு இடத்தைப் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார், அவரின் போராட்டம் வெற்றியடைய இந்தப் பிறந்த நாளில் வாழ்த்துவோம்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நகுல்...

 

Post a Comment