சண்டிவீரன் தலைப்புக்கு எதிர்ப்பு வந்தால் சமாளிக்கத் தயார்! - பாலா

|

சண்டி வீரன் படத் தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பினால், அதைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறேன் என இயக்குநர் பாலா கூறினார்.

பாலாவின் தயாரிப்பில், சற்குணம் இயக்கும் புதிய படம் ‘சண்டிவீரன்'. இதில் அதர்வா - ஆனந்தி நடிக்கின்றனர். அருணகிரி இசையமைக்கிறார்.

Bala ready to face challenges against Chandi Veeran title

‘சண்டிவீரன்' என்பது சர்ச்சை தலைப்பு என்றும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல் தயாரித்து இயக்கிய ‘சண்டியர்' பட தலைப்பை எதிர்த்தனர்.

இதுகுறித்து இயக்குநர் பாலா கூறும்போது, ‘‘டைரக்டர் சற்குணம் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து போனது. அதர்வாவும் நல்ல கதைக்காக காத்து இருந்தார். எனவே அதர்வாவுக்காக இந்த படத்தை தயாரிக்க முன் வந்தேன்.

‘சண்டியர்' பட தலைப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியதுபோல் சண்டிவீரன் தலைப்பில் நான் எடுக்கும் இந்த படத்துக்கும் எதிர்ப்புகள் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

இந்தப் படத்தின் கதை இயக்குநர் பாலாவுக்குப் பிடித்துப் போனது தெரிந்ததும், கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அதர்வா.

 

Post a Comment