சென்னை: தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்ட விஜய் தனது ஒவ்வொரு படங்களிலும் ஒரு பாடலைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டவர். முதன்முதலில் 1994 ம் ஆண்டு ரசிகன் படத்தில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்ற பாடலைப் பாடியதின் மூலமாக பின்னணிப் பாடகராகவும் அறிமுகமான விஜய், இதுவரை சுமார் 30 க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது படங்களில் பாடியுள்ளார்.
இவர் படம் தவிர்த்து நண்பர் சூர்யாவிற்காக அவரின் பெரியண்ணா படத்தில் ஒருசில பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்போது சமீபமாக தான் நடிக்கக் கூடிய எல்லாப் படங்களிலும் ஒரு பாடலைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ரசிகர்களும் இவரின் குரலில் வெளிவந்த பாடல்களுக்கு மிகுந்த வரவேற்ப்பைக் கொடுத்து வருகின்றனர்.
விஜய் சமீபத்தில் பாடிய கூகுள் கூகுள் (துப்பாக்கி), வாங்கங்கணா வணக்கங்கணா(தலைவா), செல்பி புள்ள( கத்தி) போன்ற பாடல்கள் மெகா ஹிட்டனாதைத் தொடர்ந்து தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் புலி படத்திலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்,பாடலை அவர் நடிகை சுருதியுடன் இணைந்து பாடியுள்ளதாகத் தெரிகிறது.. இசையமைப்பாளர் டி.எஸ்.பி யின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தப் பாடலை அவர் பாடியிருக்கிறார் என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு செண்டிமெண்ட் மச்சி.............
Post a Comment