விக்ரம் படத்திலிருந்து விலகினார் ப்ரியா ஆனந்த்!

|

அரிமா நம்பி படம் தந்த ஆனந்த சங்கர் விக்ரமை வைத்து இயக்கும் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த்.

அரிமா நம்பியில் விக்ரம் பிரபு - ப்ரியா ஆனந்த் நடித்திருந்தனர். ஆனந்த் சங்கர் தனது அடுத்த படத்துக்கும் ப்ரியா ஆனந்தைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

ஆனால் படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக ப்ரியா ஆனந்த் அறிவித்துள்ளார்.

Priya Anand walks out from Vikram's film

இந்த விலகலுக்கு காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ட்விட்டரில் இதுபற்றி தெரிவித்துள்ள ப்ரியா, "விக்ரம் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனாலும் படக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

ப்ரியா ஆனந்துக்கு பதில் பிந்து மாதவி இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்கிறார்கள்.

 

Post a Comment