நடிகர் சங்கத்திலிருந்து குமரி முத்துவை நீக்கியது செல்லாது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புகிறார் என்றும், சங்த்தின் நிர்வாகிகளை தரக் குறைவாகப் பேசினார் என்றும் கூறி நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார் நடிகர் குமரி முத்து. தொடர்ந்து அவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.
2013-ம் ஆண்டு நீக்கப்பட்ட அவர், அந்த முடிவை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
குமரி முத்துவை சங்கத்திலிருந்து நீக்கியது செல்லாது என இப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Post a Comment