சூரிய தொலைக்காட்சியில் மங்களகரமான வாத்தியத்தின் பெயர் கொண்ட சீரியலை 5 ஆண்டுகள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் அந்த தெய்வானை நாயக இயக்குநர். அந்த சீரியல் முடிந்த பின்னர் தற்போது புதிய சீரியலை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினும், அப்பாவும் தவிர பெரும்பாலோனோர் புதுமுகங்கள்தான்.
சீரியலில் இயக்குநரே ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடிக்கவில்லை. வேறொருவர் நடிக்கிறார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இயக்குநருக்கு பெரிய திரை வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ஏற்கனவே பெரியதிரையில் சில படங்களை இயக்கியவர்தான் இவர். அங்கு செட் ஆகவில்லை என்பதால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார்.
மங்களகரமான சீரியலுக்கு கிடைத்த வரவேற்பினால் பெரிய திரை வாய்ப்பு கிடைத்துள்ளதாம். எனவே குடும்பப்பாங்கான சினிமா எடுக்க ஸ்கிரிப்ட் தயார் செய்து வருகிறாராம். அதனால்தான் புதிய சீரியலில் நடிக்காமல் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறாராம். தன்னுடைய படத்தில் நடிக்க புதுமுகங்களை தேர்வு செய்வதோடு பிரபலமாக உள்ள இளவட்ட நாயகர்களிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம்.
Post a Comment