டாக்டரின் கன்னத்தில் பளார் விட்ட பாடகர் கைது

|

மும்பை: பாலிவுட்டின் பிரபல பாப் பாடகரான மிகா சிங்கை (38) கைது செய்திருக்கிறது டெல்லி போலீஸ். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மிகா சிங்கின் பாடல் நிகழ்ச்சியில் டாக்டர் ஸ்ரீகாந்த் என்பவரும் கலந்து கொண்டார். திடீரென்று மிகா சிங் டாக்டர் ஸ்ரீகாந்தை பளாரென்று கன்னத்தில் மேடையிலே வைத்து அறைந்திருக்கிறார். இதைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

இது தொடர்பாக இருவருமே டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார் தொடர்பாக இன்று பாடகர் மிகாசிங்கைக் கைது செய்தது டெல்லி போலீஸ். ஆனால் கைது செய்த சிலமணி நேரங்களுக்குள்ளேயே ரூபாய் 2௦௦௦௦ பணத்தைக் காட்டி பெயிலில் வெளிவந்து விட்டார் பாடகர் மிகா சிங். இவர் அடித்ததில் டாக்டர் ஸ்ரீகாந்தின் செவிப்பறையே கிழிந்து விட்டதாம், அந்த அளவிற்கு அடித்திருக்கிறார் என்ன கோவமோ யாருக்குத் தெரியும்.

டாக்டர் ஸ்ரீகாந்த் குடித்து விட்டு பிரச்சினை செய்ததால் தான் அவரை அடித்தேன் என்று கூறும் மிகா சிங் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல நடிகை ராக்கி சாவந்திற்கு முத்தம் கொடுக்க முயன்றது, குடித்து விட்டு ரசிகரைத் திட்டியது, பணத்தைக் கட்டுக்கட்டாக அள்ளிச் சென்றது போன்ற வழக்குகளில் ஏற்கனவே சிக்கிய மிகா சிங் தற்போது டாக்டர் ஸ்ரீகாந்தை ஆராய்ந்ததின் மூலம் இணையதளத்தில் மிகுந்த புகழை அடைந்துள்ளார்.

 

Post a Comment