ஜூலை 15 ல் தனி ஒருவன் ஆடியோ ரிலீஸ்?

|

சென்னை: ஜெயம் ரவி, நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் தனி ஒருவன், நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இந்தப் படம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் என்று ஜெயம் ரவியை வைத்து வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தவர் ராஜா.

தற்போது மீண்டும் தனது தம்பி ஜெயம் ரவியுடன் இணைந்திருக்கும் படம் தனி ஒருவன், இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து விட்ட நிலையில் தற்போது படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

Tani Oruvan Audio Launched At July 15?

கடைசியாக இருவரும் இணைந்த தில்லாலங்கடி படம் மாபெரும் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பின் சில வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் தனி ஒருவன், படத்தை வெற்றிப் படமாக மாற்றும் முனைப்பில் மும்முரமாக இருக்கிறார் ராஜா.

தனி ஒருவன் படத்தில் நயன்தாரா காக்கிச்சட்டை அணிந்து களம் இறங்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது. வரும் ஜூலை 15 ம் தேதியில் படத்தின் இசை வெளியீட்டை நடத்த இருகின்றனர் தனி ஒருவன் படக்குழுவினர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையமைப்பில் பாடல்கள் உருவாகி உள்ளன, மேலும் இந்தப் படத்தில் இருந்து இயக்குநர் ராஜா தனது பெயரை மோகன் ராஜா என்று மாற்றிக் கொள்ளவிருக்கிறார்.

தனி ஒருவன் படத்தின் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment