சென்னை: இளையதளபதி விஜயின் புலி படம் அவரது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜய் முதல்முறையாக ஒரு வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட சரித்திரப் படத்தில் நடிக்கிறார், இது விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுவரை இல்லாத அளவுக்கு புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையதளங்களில் டவுன்லோட் செய்து உள்ளனர் விஜய் ரசிகர்கள்.
புலி படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதம் என்று கூறிவந்த நிலையில் தற்போது புலி படத்தின் இசை வெளியீடு எப்போது என்று தகவல்கள் கசிந்துள்ளன, அதாவது ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி புலி படத்தின் ஆடியோவை வெளியிட இருக்கிறார்களாம் படக்குழுவினர்.
விரைவில் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவில் இருந்து வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புலி டீசரை இதுவரை கண்டுகளித்துள்ளவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment