3 சி கேட்கலாமா, வேண்டாமா?: ரூம் போட்டு யோசிக்கும் நம்பர் நடிகை

|

சென்னை: நம்பர் நடிகை தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்த ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

நம்பர் நடிகைக்கு முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ரப்பர் பாடியை திருமணம் செய்ய நினைத்து அவர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். ஆனால் திருமணத்திற்கு பதில் அவர்களின் காதல் முறிந்தது. இதையடுத்து நடிகை மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

அம்மணி சீனியர் நடிகை என்றாலும் இளம் ஹீரோக்கள் அவருடன் நடித்தே ஆக வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். இதனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நடிகை தற்போது ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் தனக்கு மவுசு அதிகம் உள்ளதை தெரிந்து வைத்துள்ள அவர் சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம். அவர் எத்தனை கோடி கேட்டாலும் அதை சந்தோஷமாக கொடுத்து நடிக்க வைக்க தான் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களே.

இந்நிலையில் அவருக்கு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து விளம்பரப்படங்களில் நடிக்க வைக்கவும் பலர் வரிசையில் நிற்கிறார்களாம்.

 

Post a Comment