சென்னை: முத்தக் காட்சி ஒன்றில் நடிக்க திரும்பத் திரும்ப டேக் வாங்கி படக்குழுவினர் அனைவரது காதிலும் புகையை வரவழைத்துள்ளார் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் "டார்லிங்" படத்திற்கு பின்னர் தற்போது நாயகனாக நடித்துவரும் படம் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா".
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வருகின்றனர். மேலும்,முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா மற்றும் நடிகை பிரியா ஆனந்தும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முக்கிய காட்சிக்காக மனிஷா யாதவுடன் லிப் டூ லிப் முத்தக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மனிஷா யாதவ் தயங்காமல் சிறப்பாக நடிக்க ஜி.வி.பிரகாஷோ அந்த முத்தக்காட்சிக்கு தயங்கி, தயங்கி 36 டேக்குகள் வாங்கி கடைசி டேக்கில் முத்தத்தினை சரியாகத் தந்துள்ளார். சைந்தவி மன்னிப்பாராக!
Post a Comment