5 வருடங்கள் கழித்து பேஷன் ஷோவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராய்

|

மும்பை: டெல்லியில் விரைவில் தொடங்க இருக்கும் பேஷன் ஷோவில் இந்தியாவின் சிறந்த உடையமைப்பாளர், மனிஷ் மல்கோத்ராவுடன் இணைந்து மேடையில் ராம்ப் வாக் செய்ய இருக்கிறாராம் ஐஸ்.

டெல்லியில் வருடாவருடம் ஆடைகள் வடிவமைப்பில் புதிதாக வந்திருக்கும் உடைகளை அறிந்து கொள்ளும் விழா ஒன்று நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டு தங்கள் எண்ணத்தில் புதிதாக வந்திருக்கும் ஆடைகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவர்.

Aishwarya Rai to Return on the Ramp after 5 Years for Manish Malhotra?

பாலிவுட் நட்சத்திரங்கள் அதிகம் கலந்து கொள்ளும் ஒரு விழா என்றும் இதனைக் கூறலாம். இந்த வருடம் மிகவிரைவில் தொடங்கப் படவிருக்கும் இந்தக் கண்காட்சியில் 5 வருடங்கள் கழித்து நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளவிருக்கிறார்.

ஜூலை 29 ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நடிகை ஐஸ்வர்யா ராய், மனிஷ் மல்கோத்ராவின் உடைகளை அணிந்து மேடையில் ராம்ப் வாக் இருக்கிறாராம்.

2010 ம் ஆண்டிற்குப் பின் பேஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத ஐஸ்வர்யா ராய் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்தவர்களிடம் ஐஸ்வர்யா ராயை மீண்டும் மேடையில் காணும் ஆர்வம் அதிகரித்து உள்ளது.

 

Post a Comment