சென்னை: பாகுபலி படம் தமிழில் ரூ. 50 கோடியை வசூலித்துள்ளதாம்.
தமிழில் இந்த வருடம் மொழி மாற்றுப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்திய உதாரணம் பாகுபலி. படம் வெளிவந்து 3 வாரங்களைக் கடந்து விட்டது ஆனால் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் குவிகிறது என்று கூறுகிறார்கள்.
உலகமெங்கும் வசூலில் இதுவரை சுமார் 400 கோடியைத் தாண்டியிருக்கும் இந்தத் திரைப்படம், தமிழில் மட்டும் சுளையாக இதுவரை 50 கோடிகளை அள்ளி இருக்கிறது என்று தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரிய அளவில் ஸ்டார் நடிகர்கள் இல்லை தமிழில் படம் எடுபடாது என்று பாகுபலி வெளியீட்டிற்கு முன்பு ஏகப்பட்ட கணிப்புகள் வெளியாகின, அவை அத்தனையையும் முறியடித்து வசூலில் உச்சத்தைத் தொட்டு இருக்கிறது பாகுபலி.
முதல் 6 மாதங்களில் தமிழ் சினிமா நஷ்டங்களைச் சந்தித்து தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறது, பாபநாசம், இன்று நேற்று நாளை, பாலக்காட்டு மாதவன், யாகாவராயினும் நாகாக்க போன்ற படங்கள் வெளியாகி சமீபகாலமாகத்தான் தமிழ் சினிமா முன்னேற்றத்தை நோக்கி திரும்பியிருக்கிறது.
ஆனால் பிறமொழிப் படங்களுக்கு சவால் கொடுக்கக் கூடிய வகையில் சமீபகாலமாக எந்தத் தமிழ்ப் படங்களும் வெளிவராததால், பிறமொழிப் படங்களின் ராஜ்ஜியம் இங்கு கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.
Post a Comment