சென்னை: நண்பர்களைக் கொண்டு இயக்கிய தலைநகர் படத்திலேயே சிக்சர் அடித்து அனைவரையும் அவுட் ஆக்கியவர் இந்த வாரிசு இயக்குநர். இவர் கோட் நடிகர் படம் உட்பட அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சாப்பாட்டு படம் ஒன்றை தம்பி நடிகரை வைத்து இயக்கினார். பில்டப்புகளுக்கு தக்கபடி படம் ஓடவில்லை.
எனவே, அடுத்ததாக வெற்றிப் பட நாயகனாக வலம் வரும் அண்ணனை இயக்கினார். பேய், பூதம் என எவ்வளவோ பிலிம் காட்டியும் அந்தப் படமும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.
அடுத்தடுத்து படத் தோல்விகளால் இந்த இயக்குநரிடம் கதை கேட்கக் கூட மற்ற நடிகர்கள் நேரம் தர மறுக்கிறார்களாம். இதனால் உடனடியாக ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குநர் இருக்கிறார். இந்தப் படத்தை முன்னணி நடிகர்கள் இல்லாமல் எடுக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் தனக்கிருந்த பெயரை தம்பியும், அண்ணனும் அடுத்தடுத்து நடித்து ஆப்பு வைத்து விட்டார்களே என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம் இந்த இயக்குநர்.
Post a Comment